Thursday, May 7, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தர் சிலைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு

புத்தர் சிலைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு

வத்தேகம எல்கடுவ வீதியில் மலியதேவ விஹாரைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அடியில் பிறந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த சிசு வத்தேகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தர் சிலைக்கு அடியில் சிசு ஒன்று காணப்படுவதனை அவதானித்த பிரதேசவாசிகள் அதனை எடுத்துச் சென்று வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் கூறினர்.

குழந்தை நலமுடன் இருப்பதாக வத்தேகம வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் குழந்தையை பிரசவித்த தாய் குறித்து அறிந்து கொள்ள வத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles