Thursday, May 7, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉர கொள்வனவுக்கு வவுச்சர்கள்

உர கொள்வனவுக்கு வவுச்சர்கள்

சிறுபோக நெற்செய்கைக்கு பசளை கொள்வனவிற்கான வவுச்சர்களை விநியோகிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த யோசனைக்கு நிதிக்குழுவின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விவசாய அமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விவசாய அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

ஒதுக்கப்படும் நிதி மூலம் சிறுபோகத்தில் எவ்வித இடையூறுமின்றி அரச மற்றும் தனியார் துறையினரிடமிருந்து விவசாயிகள் பசளையை கொள்வனவு செய்ய முடியும். இதேவேளை, உரத்தின் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யப்படும். அடுத்த பெரும்போகம் முதல் உர விநியோக செயற்பாட்டிலிருந்து அரசாங்கம் விலகவுள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

உர விநியோக செயற்பாட்டை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles