Thursday, May 7, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற வானிலை: மத்தளவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை: மத்தளவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த இரு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

கட்டுநாயக்க பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நேற்றிரவு 10.25 மணியளவில் மெல்பேர்னிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் UL 605 விமானம், மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

அதேபோன்று தமாமிலிருந்து இன்று அதிகாலை 5.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் UL 264 விமானமும் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல விமான சேவைகள் தாமதமடைந்துள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles