Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உலகம்ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு

ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் மீது பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. 

அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்தது.

இதனால் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

அதன் ஒருபகுதியாக மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியிலும் கச்சா எண்ணெய் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.

இதனால் அந்த நாட்டின் பொதுமக்களே ரஷ்யா மீதான இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது துருக்கியிடம் இருந்து இயற்கை எரிவாயுவை வாங்குவதற்கும், அசர்பைஜான் நாட்டில் இருந்து வாங்கும் எரிவாயுவை துருக்கி வழியாக கொண்டு செல்வதற்கும் அந்த நாட்டின் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஹங்கேரிய வெளியுறவுத்துறை அமைச்சர் பீட்டர் சிஜார்டோ தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles