Sunday, September 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'மக நெகும' உட்பட அதனுடன் இணைந்த 4 நிறுவனங்களை மூட தீர்மானம்

‘மக நெகும’ உட்பட அதனுடன் இணைந்த 4 நிறுவனங்களை மூட தீர்மானம்

மக நெகும’ மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று காலை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு நிதி பற்றாக்குறை நிலவுதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

‘மக நெகும’ வீதி கட்டுமான உபகரண நிறுவனம், 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது முன்னர் இருந்த வீதி கட்டுமான அபிவிருத்தி நிறுவனத்தின் (RCDC) மறு உருவாக்கமாக இருந்தது.

எவ்வாறாயினும், இந்த அரச நிறுவனமும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் அவற்றைப் பராமரிப்பதற்கான நிதிப் பற்றாக்குறையால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

அரச நிறுவன மறுசீரமைப்பின் கீழ் இந்த நிறுவனங்கள் கலைக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles