Sunday, November 17, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளது

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளது

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான தனது அறிக்கையை வெளியிட்டுள்ள குறித்த சுயாதீன ஆணைக்குழு, இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கவனம் செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா, நைஜீரியா மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளிலும் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில மதத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles