Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்து

மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இபோச பேருந்து ஒன்று மாரவில – லன்சிகம பகுதியில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (02) அதிகாலை 1.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.டிப்போவுக்குச் சொந்தமான பேருந்தே விபத்துக்குள்ளானதுடன், சாரதியால் வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், பேருந்து மற்றும் மின்கம்பமும் பலத்த சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து மின்கம்பத்தில் மோதியதால் சுற்றுவட்டாரப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles