Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி உள்ளது

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி உள்ளது

நாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி உள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி கட்டளை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஹேஷான் சுமனசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையிலான மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி, 30 கப்பல்கள் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் 29 கப்பல்கள் புத்தளத்தை அடைந்துள்ளன.

நிலக்கரி அடங்கிய 30 ஆவது கப்பல் நாளை அல்லது நாளை மறுதினம் நாட்டை வந்தடையும் எனவும் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஹேஷான் சுமனசேகர தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles