Sunday, September 14, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் சீனாவின் முதலீடுகள் அதிகரிக்கும்

இலங்கையில் சீனாவின் முதலீடுகள் அதிகரிக்கும்

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீனாவின் மிகப் பெரிய பல்நோக்கு கூட்டுத்தாபனமான China Merchants குழுமத்தின் தலைவர் இலங்கையில், சீனாவின் சமீபத்திய முதலீட்டுத் திட்டங்களின் முதலீடுகள், சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்று கூறியுள்ளார்.

நாட்டிற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டுள்ள Miao Jianmin, 15 திட்டங்களுக்காக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில், நடைபெற்ற கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

2008 ஆம் ஆண்டு இலங்கை சந்தையில் நுழைந்த சீன மெர்சண்ட்ஸ் குழுமம், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 1.68 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த முதலீட்டை மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில், வளமான ஹம்பாந்தோட்டை நிலத்தில்,சீனா அசாதாரண அத்தியாயத்தை எழுதும், அத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை முன்னோக்கி நகர்த்தும் என்றும் ஜியான்மின் நிகழ்வின்போது கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles