Tuesday, November 19, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇனப்பிரச்சினைக்கு பரஸ்பர இணக்கமான தீர்வு விரைவில் – ஜனாதிபதி

இனப்பிரச்சினைக்கு பரஸ்பர இணக்கமான தீர்வு விரைவில் – ஜனாதிபதி

இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த வருடத்தில் உடன்பாடு எட்டப்படுமென எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று (01) தனது சர்வதேச தொழிலாளர் தின அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“எனது உந்துதல் அரசியலில் வேரூன்றவில்லை, மாறாக நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகித்தல் மற்றும் குடிமக்கள் மீதான சுமைகளைக் குறைப்பதில் இருந்தது” என்று ஜனாதிபதி தனது மே தின உரையில் மேலும் தெரிவித்தார்.

“இந்த காரணத்திற்காக, நான் ஜனாதிபதியின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன், பொருளாதாரத்தை மீட்டெடுக்க மற்றும் அதனை அடைய ஆதரவான அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எனது திறனில் எனக்கு நம்பிக்கை இருந்தது”, என்று அவர் கூறினார்.

சுதந்திரம் அடைந்து நூற்றாண்டை அடையும் 2048 ஆகும் போது இந்தியா 2047 இலும் சீனா 2049 இலும் சாதிக்க எதிர்பார்ப்பது போன்று அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக மாறுவதே இலங்கையின் இலக்காக இருக்க வேண்டும்.

அத்துடன், 2048 இலங்கைக்கு அபிவிருத்திக்கான ஆண்டாகும் என்பதோடு தற்போதைய சந்ததியினருக்காக மட்டுமல்லாது எதிர்கால இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும் தான் இந்த நாட்டை கட்டியெழுப்புகிறோம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் போது நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து சமூகங்களின் உரிமைகளை மதித்து, பாதுகாத்து முன்னேறுவது முக்கியம் என்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் பரஸ்பர இணக்கமான தீர்வை எட்ட உத்தேசித்திருப்பதாக அவர் கூறினார்.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் தூரமாகியிருப்பது வீண் என்று தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நியாயமான, புதிய, போட்டித்தன்மையுள்ள மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles