அண்மைக்காலமாக அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணங்களால் ஏற்படும் மேலதிக செலவினங்களை ஏற்றுக்கொள்வதற்காக நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
சபையின் பிரதி பொது முகாமையாளர் என்.கே. ரணதுங்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
புதிய மின் கட்டணங்களை நிர்வகிப்பதற்கான கூடுதல் செலவை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஏற்க வேண்டும் இருப்பினும்இ நீண்ட காலத்திற்கு அவ்வாறு செய்ய முடியாது.
மின்சாரக் கட்டண உயர்வால் நிறுவனத்திற்கு 4 பில்லியன் ரூபா மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வால் 10 வருடங்களுக்கு பின்னர் கடந்த செப்டெம்பரில் நீர் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது எனினும் அண்மைய மின் கட்டண உயர்வின் பின் நீர் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.