இந்திய விமானப்படையின் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உத்தியோகபூர்வ விஜயமாக மே முதலாம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவின் அழைப்பின் பிரகாரம் அவரது விஜயம் நடைபெறவுள்ளது.
இரு நாடுகளின் விமானப் படைகளுக்கிடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கூட்டுப் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் பற்றிய கலந்துரையாடல்களை எளிதாக்குவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.