இந்த வருடம் தேசிய வெசாக் நிகழ்வுகள் சிலாபத்தில் நடைபெறுகிறது.
சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெபெல்வேவல ஸ்ரீ ரதனசிறி பிரிவென விகாரையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.
வெசாக் வாரத்தை முன்னிட்டு மே மாதம் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பல சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.