இந்தியாவில் இருந்து ஒரு மில்லியன் முட்டைகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஆய்வக சோதனைகளுக்காக கையிருப்பில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் இன்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அனுப்பப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.