Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுசங்காவின் சாதனையை முறியடித்தார் குசல்

சங்காவின் சாதனையை முறியடித்தார் குசல்

அயர்லாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் குசல் மெண்டிஸ் தனது முதலாவது டெஸ்ட் இரட்டை சதத்தை இன்று (27) பெற்றார்.

தற்போது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் அயர்லாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸ் துடுப்பாடி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணி பெற்ற, 492 ஓட்டங்களை இலங்கை அணி கடந்துள்ளது.

இதேவேளை, அயர்லாந்திற்கு எதிராக இந்த இன்னிங்ஸில் 10 சிக்ஸர்களை அடங்கலாக 200* ஓட்டங்களை குவித்த குசல் மெண்டிஸ், டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை பெற்ற இலங்கை வீரர் என்ற குமார் சங்கக்காரவின் சாதனையை முறியடித்தார்.

அதன்படி, 2014 இல் பங்காளதேஸுக்கு எதிராக சங்கக்காரவின் எட்டு சிக்ஸர்கள் என்ற முந்தைய சாதனையை மெண்டிஸ் முறியடித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles