Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுனாமி எச்சரிக்கை குறித்து அறிவிக்க புதிய முறை

சுனாமி எச்சரிக்கை குறித்து அறிவிக்க புதிய முறை

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் கையடக்கத் தொலைப்பேசிகளுக்கான ரிங்டோனை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் 99.9 சதவீதமான மக்கள் கையடக்கத் தொலைப்பேசியை வைத்திருப்பதால், சுனாமி அபாயம் குறித்து கையடக்கத் தொலைப்பேசியின் ரிங்டோன் மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைப்பேசி நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் பெரும்பாலானோர் அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை உறங்கிக் கொண்டிருப்பதால், அந்த நேரத்தில் சுனாமி அபாயம் குறித்து தகவல் கிடைத்தால், அனைத்து கையடக்கத் தொலைப்பேசிகளிலும் ரிங்டோன் ஒலிக்கும் முறைமை தயார் செய்யப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) இடம்பெற்ற நிலநடுக்க அபாயம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles