Friday, April 10, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

10 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சா கடத்தி சென்ற சந்தேக நபர் ஒருவர் கருவலகஸ்வெவ பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம்-அனுராதபுரம் வீதியில் நேற்று (26) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் நாகவில்லுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் புத்தளம் அனுராதபுரம் வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரிடம் இருந்த பையில் 10 கிலோ 153 கிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் மற்றும் கேரள கஞ்சாவை புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles