Friday, April 10, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமே 20ம் திகதிக்கு பின்னர் வெப்பம் குறையும்

மே 20ம் திகதிக்கு பின்னர் வெப்பம் குறையும்

எதிர்வரும் மே மாதம் 20ம் திகதிக்கு பின்னர், வெப்பமான காலநிலை குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டில் தற்போது மழை கிடைக்கப்பெறும் நிலையில், வெப்பம் குறைவடைவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் காணப்பட்ட வெப்பநிலை தற்போது சிறியளவில் குறைவடைந்துள்ளது.

எனினும், இன்னும் வெப்பநிலை நீங்கவில்லை.

மழைவீழ்ச்சி தொடர்ந்தும் அதிகரிக்குமானால், வெப்பநிலை அடுத்த மாதம் 20ம் திகதிக்கு பின்னர் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles