அம்பாறை – பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 38 வயதுடைய சிறுமியின் தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 14 வயது சிறுமி கடந்த 3 வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.