யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சாவகச்சேரி சங்கத்தானை பகுதியைச் சேர்ந்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் கோ. கஜீவன் (வயது 25) எனும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நேற்று (25) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, கொடிகாமம் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்