மே 9ஆம் திகதிக்குப் பின்னர் பாடசாலை மாணவர்களின் காலணிகள் மற்றும் பைகளின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உற்பத்தியாளர்களுக்கும், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை 500 முதல் 1000 ரூபா வரை குறைப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.
அந்தக் கலந்துரையாடலில், டொலரின் பெறுமதி குறைந்துள்ளதால், பாடசாலைப் பைகள் மற்றும் காலணி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாகவும், அதனால் பாடசாலை மாணவர்களுக்கு நன்மை வழங்குமாறும் உற்பத்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, மே 9ஆம் திகதிக்க்குப் பிறகு பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை 500 முதல் 1000 ரூபாய் வரை குறைக்க உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.