நாட்டில் தற்போது 119 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் நோயாளிகளுக்கு தேவையான 114 வகையான உயர் காக்கும் மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
அந்த 14 வகை உயிர்காக்கும் மருந்துகளில் இரண்டு வகையான மருந்துகள் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்திய கடன் திட்டத்தில் 99 சதவீதம் மருந்துகளை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் 300க்கும் மேற்பட்ட மருந்து வகைகள் கடன் திட்டத்தில் இருந்து பெறப்பட உள்ளன.
எதிர்வரும் மே மாத இறுதிக்குள் மருந்துப் பற்றாக்குறையை மட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதார அமைச்சு கூறுகிறது.