Wednesday, November 20, 2024
25.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅருண் சித்தார்த் விளக்கமறியலில்

அருண் சித்தார்த் விளக்கமறியலில்

வன்முறைக் குற்றச்சாட்டில் செய்யப்பட்ட யாழ். சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த்தை எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை சிறையில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது கடந்த 20 ஆம் திகதி இரவு அருண் சித்தார்த் தலைமையில் பெண்கள் அடங்கிய 7 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் மேற்கொண்டதுடன், ஹோட்டல் உரிமையாளராகிய தன்மீது சாணித் தண்ணீர் ஊற்றியதாக, பொலிஸ் நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் அருண் சித்தார்த், அவரது மனைவி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையி, அவர்களில் பால் ஊட்டும் தாயாராக இருந்தவருக்கு கடுமையான எச்சரிக்கையுடன் பிணை வழங்கிய நீதிமன்றம் ஏனைய ஐவரையும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles