Tuesday, November 19, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயங்கரவாத சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்பிப்பது பிற்போனது

பயங்கரவாத சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்பிப்பது பிற்போனது

புத்தாண்டின் பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றம் இன்று (25) காலை 09.30 மணிக்கு கூடவுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், 2023 ஜனவரி 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட எண் 2217/28 வர்த்தமானி தொடர்பில் இன்று விவாதிக்கப்பட உள்ளது.

இதேவேளை, இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த பயங்கரவாத சட்டமூலத்தை சமர்பிப்பது இன்னும் சில வாரங்கள் தாமதமாகியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியின் கீழ் இந்த ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம் நாளை (26) ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி நாளை முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு விவாதம் நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles