Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசக பிக்குமார்களால் சித்திரவதைக்குள்ளான பிக்கு வைத்தியசாலையில்

சக பிக்குமார்களால் சித்திரவதைக்குள்ளான பிக்கு வைத்தியசாலையில்

துறவரம் பூண்டு 45 நாட்களேயான எட்டு வயது பௌத்த பிக்கு ஒருவர், மந்திரத்தினை சரியாக உச்சரிக்க தவறியமையால் சக மூன்று பிக்குகளால் தொடர்ந்து கடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சித்திரவதைக்கு உள்ளான பிக்கு கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

மேற்படி, சம்பவம் புஸ்சல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டை பாதை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமுற்ற பிக்குவின் தந்தை சம்பவத்தினை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles