ஜேர்மனியில் உள்ள இரண்டு முக்கிய விமான நிலையங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புத் தொழிலாளர்கள் மற்றும் தரையிறங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், இதன் விளைவாக பெர்லின் மற்றும் ஹாம்பர்க் விமான நிலையங்களில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, பெர்லின் பிராண்டன்பேர்க் விமான நிலையத்தில் அனைத்துப் புறப்பாடுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் விமானங்கள் தரையிறங்குவதும் பாதிக்கப்படலாம் என்று அதன் ஊழியர்கள் கூறுகின்றனர்.