நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் இதற்கான விசேட வர்த்தமானி கடந்த வெள்ளிக்கிழமை (21) வெளியிடப்பட்டது.
அதன்படி, நலத்திட்ட உதவித் திட்டத்திற்காக 4 சமூகக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இடைநிலை, நலிவடைந்த, ஏழை மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அறத்கமைய, மிகவும் ஏழ்மையான பிரிவின் கீழ் வரும் குடும்பங்களுக்கு ரூ. 15,000 உதவித் தொகை வழங்கப்படும் என வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.