Monday, December 22, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய முட்டைகள் மேல் மாகாணத்துக்கு மட்டும் விநியோகம்

இந்திய முட்டைகள் மேல் மாகாணத்துக்கு மட்டும் விநியோகம்

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மேல் மாகாணத்துக்கு மாத்திரமே விநியோகம் செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாகாணங்களில் உள்ள பாரியளவான வெதுப்பக மற்றும் உணவகங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு பாரிய கேள்வி உள்ளதாக அதன் தலைவர் ஆசிர வலிசுந்தர தெரிவித்தார்.

தேவைக்கு ஏற்ற வகையில் விநியோகத்தை வழங்க முடியும் என்றாலும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமை பிரச்சினையாக உள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles