ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (24) மீண்டும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் முன்னாள் சட்டமா அதிபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதும் அவர் சமூகமளிக்கவில்லை.
அதற்கு பதிலாக முன்னாள் சட்டமா அதிபர் சட்டத்தரணிகள் ஊடாக உண்மைகளை முன்வைத்திருந்தார்.
எனினும், இன்று (24) மீண்டும் பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சட்டமா அதிபர் இம்முறை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகாவிட்டால், அது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கையிடவும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.