2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியல் சுமார் 700 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாதியர்களில் 550 பேர் சுகாதார அமைச்சின் அனுமதி பெற்று ஐந்தாண்டுகளுக்கு மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும், சுமார் 150 தாதியர்கள் வேலையை விட்டு வெளிநாடு சென்றுள்ளதாகவும் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், தாதியர் சேவையில் தற்போது சுமார் 2,400 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இந்த வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் சாமிக்க கமகே தெரிவித்தார்.