தற்போது நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரசாங்க குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடும் வெப்பமான காலநிலையினால், கர்ப்பிணித் தாய்மார்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும், அது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு பலதரப்பட்ட உபாதைகள், கடுமையான தலைவலி, தலைசுற்றல் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்தார்.
இதன் காரணமாக, பயணங்களை கட்டுப்படுத்தி,சுத்தமான தண்ணீரை அதிகமாக குடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.