பொது பாதுகாப்பு அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக ஆள்மாறாட்டம் செய்த ஒருவர் சிலாபத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி அமைச்சு அதிகாரி ஒருவரை தொலைபேசியில் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கடந்த புதன்கிழமை சிலாபம் கொட்டாரமுல்லையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதற்கு முன்னரும் அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக ஆள்மாறாட்டம் செய்து சில பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர் அச்சுறுத்தல் விடுத்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.