Saturday, September 13, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெமட்டகொட சமிந்தவின் உதவியாளர் கைது

தெமட்டகொட சமிந்தவின் உதவியாளர் கைது

இலங்கையில் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான தெமட்டகொட சமிந்தவின் பிரதான உதவியாளர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான தெமட்டகொட சமிந்த என்ற சமிந்த ரவி ஜயநாத்தின் மகன் மலீஷ என்ற நபரின் வழிகாட்டலின் கீழ் இவர் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

அங்கு சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் ஹெரோயின் அடங்கிய 400 பொதிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டெடுத்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles