பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 23 பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன தெரிவித்தார்.
அக்குறணை பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களை இலக்கு வைத்து குண்டுவெடிப்பு நடத்தப்படும் என கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி பாணந்துறை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள 14 பள்ளிவாசல்கள், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் 3 பள்ளிவாசல்கள் மற்றும் பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 6 பள்ளிவாசல்களை உள்ளடக்கும் வகையில் பொலிஸ் நடமாடும் சேவை வாகனங்கள் மூலம் விசேட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அந்த பகுதிகளில் அந்நியர்கள் நடமாடினால் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.