Sunday, August 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார பாவனை நேற்று அதிகரிப்பு

மின்சார பாவனை நேற்று அதிகரிப்பு

அண்மைக் காலங்களில் இலங்கையின் நாளொன்றுக்கான அதிகூடிய மின்சார தேவை நேற்று (19) பதிவானதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், தேவைக்கு ஏற்ப நிகர மின் உற்பத்தி 49.53 கிகா வோட்டாக பதிவானதாகவ இன்று ( 20) ட்விட்டரில் பதிவில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இன்று காலை பதிவு செய்யப்பட்ட உண்மையான தேவையின்படி, இன்று மின் உற்பத்தி 50 கிகா வோட்டை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, அண்மையில் நிறுவப்பட்ட ஹம்பாந்தோட்டை, டீசலில் இயங்கும் மின்பிறப்பாக்கிகள் உட்பட இலங்கை மின்சார சபையின் அனைத்து அனல்நிலையங்களும் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles