Monday, June 29, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து - பாரவூர்தி மோதி விபத்து: 10 பேர் வைத்தியசாலையில்

பேருந்து – பாரவூர்தி மோதி விபத்து: 10 பேர் வைத்தியசாலையில்

வென்னப்புவ – நயினமடம பாலத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இருந்து புல்முடை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles