Tuesday, December 23, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் பலி

வாகன விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் பலி

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் கொடிகாமம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்களில் பயணித்த உத்தியோகத்தரை பின்னால் வந்த இலங்கை பேருந்து ஒன்று மோதியதோடு, எதிரில்வந்த லொறியும் குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருந்து மற்றும் லொறி சாரதிகளை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles