அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக, மின்சாரம் மற்றும் குடிநீர் என்பவற்றுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
தற்போதுவரையில், நீர் பாவனையானது, 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அந்தச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் என்.யு.கே ரணதுங்க, இலங்கை முழுவதும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
நீரை அனைவருக்கும் வழங்குவதற்கான முகாமைத்துவப் பணிகள் இடம்பெறுவதுடன், தற்போது தடையின்றி விநியோகம் முன்னெடுக்கப்படுகிறது.
எனினும், மக்கள் நீரை வீண்விரயம் செய்யாமல், தமது நுகர்வுக்காக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் என்.யு.கே ரணதுங்க தெரிவித்துள்ளார்.