துறைமுகத்தில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்கு அனுமதியில் பாரிய தாமதங்களைத் தவிர்ப்பதற்காக டிஜிட்டல் தொடர்பாடல் முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (18) நடைபெற்றது.
இதற்கு சுமார் 35 மில்லியன் டொலர் செலவாகும் எனவும் இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் உரிய முறை நடைமுறைப்படுத்தப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.