கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள பனாமா நாட்டு கப்பலுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முற்பட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபர்கள் நேற்று (18) காலி பிரதான நீதவான் இசுரு நெட்டிகுமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், குறித்த நபர்களை அனுப்பிவைத்த பிரதான சந்தேகநபரை உடனடியாகக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் ஜூலை 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.