Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 12 பேர் கைது

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 12 பேர் கைது

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மூன்று டிங்கி படகுகளுடன் 12 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்பில் கடற்படையினர் கடந்த இரண்டு நாட்கள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய உபகரணங்களும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் கைதான நபர்கள் 28 முதல் 59 வயதுக்குட்பட்ட மன்னார், தாளையடி, பிள்ளையார் கோயிலடி, புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த 12 பேர், மீன்பிடி சாதனங்கள் மற்றும் மூன்று டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles