Sunday, August 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெற்றிலையோடு பயன்படுத்தும் இளம்சிவப்பு நிற சுண்ணாம்பால் ஆபத்து

வெற்றிலையோடு பயன்படுத்தும் இளம்சிவப்பு நிற சுண்ணாம்பால் ஆபத்து

வெற்றிலையோடு பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு சுண்ணாம்பில் ரோடமைன் பி என்ற புற்றுநோயை உண்டாக்கும் சேர்மம் இருப்பது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட நாற்பத்தெட்டு வெற்றிலை பொதி மாதிரிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இளஞ்சிவப்பு சுண்ணாம்பில் இந்த புற்று நோய் உண்டாக்கும் இரசாயனம் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

ரோடமைன் பி என்பது ஆடை மற்றும் காகித அச்சிடும் தொழில்களில் நிறமியாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும், மேலும் இது களைக்கொல்லிகளை நிறமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் செயற்கை சாய இரசாயனமாகும். எனவே, உண்ணக்கூடிய சுண்ணக்கட்டியின் நிறத்தை மாற்ற இதுபோன்ற இரசாயனத்தைப் பயன்படுத்துவது கடுமையான சமூகக் குற்றம் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles