ரயில் சேவையை தொடரும் நோக்கில், சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பதவிகளுக்கு சுமார் ஆயிரம் இராணுவ அதிகாரிகள் கொண்ட குழுவிற்கு பயிற்சி அளித்து ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சுமார் 400 ரயில் சாரதிகளுக்கான வெற்றிடங்கள் உள்ளதாலும், தற்போதுள்ள சாரதிகள் அவ்வப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாலும்இ ஏனைய தொழில் வல்லுநர்களும் அவ்வப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக இராணுவ அதிகாரிகளிடம் விண்ணப்பங்கள் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இயந்திர சாரதி பதவிகளுக்கு கல்வித் தகைமை கொண்ட குழுவொன்றை இணைத்து பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.