பதுளை – தல்தென இளம் பராய குற்றவாளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற அனைத்து கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
பதுளை – தல்தென இளம் பராய குற்றவாளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில், 9 பேர் நேற்றைய தினம் தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து அவர்களில் நான்கு பேர் நேற்றைய தினமே கைது செய்யப்பட்டனர்.
ஏனைய அனைவரும் இன்று அதிகாலையில் குறித்த புனர்வாழ்வு நிலையத்திற்கு அண்மித்த காட்டுப் பகுதியில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் இந்த புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.