செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபா பெறுமதியில் சரிவு

இலங்கை ரூபா பெறுமதியில் சரிவு

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி இன்று 312.07 ரூபாவாக பதிவாகியுள்ளது.

விற்பனை பெறுமதி 327.02 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன்படி அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியினை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வாரம் (ஏப்ரல் 11) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 311.44 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 327.66 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles