இன்று (17) காலை பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறினால் பிரதான பாதையில் ஒரு ரயிலை தவிர, ஏனைய ரயில்கள் அதிக சிரமமின்றி இயங்கியதாக ரயில்வே மேலதிக பொது மேலாளர் வி. எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையிலான ரயில் சாரதிகள் பணிக்கு வருகை தந்துள்ளதுடன், அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.