பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் வழங்குவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
நாளை (18) முதல் மீண்டும் பழைய எரிபொருள் கோட்டாவை வழங்க முன்னர் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதற்கமைய, அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா தொடர்ந்து வழங்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.