Tuesday, August 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிஸ்கட் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய புதிய 'அரிசி' வகை அறிமுகம்

பிஸ்கட் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய புதிய ‘அரிசி’ வகை அறிமுகம்

பிஸ்கட் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய புதிய ‘அரிசி’ ரகத்தை பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வகை பி.ஜி. 381 என்ற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பத்தலகொட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜே.பி. சேனநாயக்க தெரிவித்தார்.

பிஸ்கட் உற்பத்திக்கு தேவையான அரிசி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அரிசி வகையை பிஸ்கட் தொழில் துறையில் அதிக வெற்றிகரமான முறையில் பயன்படுத்த முடியும் எனவும், இந்த அரிசி வகையை கண்டுபிடித்திருப்பது ஒரு சாதனை எனவும் பத்தலகொட அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நெல் ரகம் ஓரளவு மகசூல் தரக்கூடியதுஇ ஏக்கருக்கு நான்கு மெட்ரிக் டன் மகசூல் தருகிறது.

வறண்ட பிரதேசத்திற்கு இந்த நெல் வகை பொருத்தமானது எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles