Wednesday, April 30, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டை முடக்கியது ஏன்? அரசாங்கம் விளக்கம்

நாட்டை முடக்கியது ஏன்? அரசாங்கம் விளக்கம்

நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கை, இயல்பு வாழ்க்கை, பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவே அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் கருத்து சுதந்திரம், பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேச்சு சுதந்திரம் , கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தும் உரிமை உள்ளிட்ட பொது மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் இந்த விடயங்கள் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles