இலங்கையிலுள்ள பாடசாலைகளில் 5,000க்கும் அதிகமான அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதால் பாடசாலை நடவடிக்கைகள் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக அநீதியால் பாதிக்கப்பட்டோர் ஒன்றியத்தின் தலைவர் சாமர அடிபத்து தெரிவித்தார்.
சுமார் இரண்டாயிரம் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, 2019 ஆம் ஆண்டு அதிபர் பரீட்சை நடத்தப்பட்டது.
அதில் சுமார் 11,000 பேர் கலந்துகொண்டனர்.
பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் சித்தியடைந்தவர்கள் அதிபராக பணியமர்த்தப்பட்டதோடு 1,700 பேர் நேர்முகத்தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.
எவ்வாறாயினும்இ கடந்த வருடம் 4800 அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்வொன்றை வழங்கிய போதிலும், நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மீள் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
#Aruna